
வலிமை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் படத்துக்கு தற்காலிகமாக ஏகே 61 எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் துவங்கவிருக்கிறது.
வலிமை படத்தில் யுவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவருக்கு பதிலாக ஏகே 61ல் அனிருத் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிக்க | 'பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகும் ஆர்யன்: காரணம் இதுவா?
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கவின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார்.
டாக்டர் படத்தில் இயக்குநர் நெல்சனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கவின், நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட கதை விவாதத்தில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. மேலும் தமிழ் சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகளை வலிமை முறியடித்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.