இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா தனது 16 வயதில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படம் வெளியாகி 25 வருடங்களாகிறது. அந்த வகையில் யுவன் இசையமைப்பாளராக அறிமுகமாகி கால் நூற்றாண்டை கடந்துள்ளார்.
இந்த நிலையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகளானதையொட்டி, யுவன் ஷங்கர் ராஜா பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், நடிகர் விஜய்யின் மகன் யுவனிஸம் என்று உடையில் எழுதியிருக்கும் புகைப்படத்தை அவரது மேலாளர் ஜெகதீஷ் எனக்கு அனுப்பினார். பின்னர் ஒரு நாள் நான் நடிகர் விஜய்யை சந்தித்தேன்.
அப்போது அவர், 'என் மகன் உங்களது தீவிர ரசிகன். நான்தான் அந்தப் புகைப்படத்தை உங்களுக்கு அனுப்ப சொன்னேன். எப்பொழுதும் உங்களது பாடல்களைத் தான் கேட்பார்'' என்று கூறினார். தலைமுறைகள் கடந்தும் என் பாடல்கள் ரசிக்கப்படுவதை எண்ணி, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது'' என்றார்.
இதையும் படிக்க | ''இனிய நண்பர்... '': முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
மேலும், ''பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன். அவர் நல்ல எழுத்தாளர். நானும் அவரும் இணைந்து நிறைய வெற்றிப் பாடல்களில் பணிபுரிந்திருக்கிறோம். இசையைக் கொடுத்த சிறிது நேரத்தில் பாடல் எழுதக் கூடியவர்'' என்று குறிப்பிட்டார்.
மேலும் என்னுடன் பணியாற்றிய பாடலாசிரியர்கள் பா.விஜய் சினேகன் ஆகியோருக்கு நன்றி.நான் பயணங்களில் அதிகம் என் அப்பா இளையராஜா பாடல்களைக் கேட்பேன் இவ்வாறு பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவமிநாதன் நியமனம்!

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?

சபலென்கா, ஸ்வியாடெக், எலா வெற்றி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

