'வலிமை' மூலம் அரசியலில் நுழைய முன்னோட்டம் பார்க்கும் அஜித் ? வெளியான விளக்கம்

நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் பதிவு வைரலாகி வருகிறது.  
'வலிமை' மூலம் அரசியலில் நுழைய முன்னோட்டம் பார்க்கும் அஜித் ? வெளியான விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் சங்கலிங்கம் நடிகர் அஜித் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்திருந்தார். அவரது பதிவில், வலிமை படம் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று வெளியானதற்கு, அஜித் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்துகொள்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது என்று பதவிட்டிருந்தார்.

இது பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியானது. அஜித் உண்மையில் அரசியலுக்கு வரவிருக்கிறாரோ என்ற எண்ணத்தையும் ரசிகர்களிடையே உருவாக்கியது. இந்தத் தகவல் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், நடிகர் அஜித் குமாருக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. இதுபோன்ற தவறான தகவல்கள் பகிர்வதை தவிர்க்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

வலிமை திரைப்படம் வெளியான பிப்ரவரி 24, முன்னாள் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மட்டுமல்ல, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறைந்த நாள். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்தான் வலிமை படத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில நாட்களிலேயே படத்தின் முதலீ்டு தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து மூன்றாவது முறையாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் கூட்டணி ஏகே 61 படத்துக்காக இணைகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் கவின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். மேலும் அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com