''2 மாசத்துக்கு முன்னாடியே 'ராதே ஷ்யாம்' படம் பார்த்தேன்...'': உதயநிதியின் பேச்சு வைரல்

ராதே ஷ்யாம் படம் குறித்து நடிகர் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் பேச்சு வைரலாகி வருகிறது. 
''2 மாசத்துக்கு முன்னாடியே 'ராதே ஷ்யாம்' படம் பார்த்தேன்...'':  உதயநிதியின் பேச்சு வைரல்

பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

இந்தப் படம் 1970களில் ஐரோப்பாவில் நடக்கும் கதை. இந்தப் படத்தில் கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். முழுக்க, முழுக்க காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சத்யராஜ், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த நிலையில் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ், சிபி சத்யராஜ், உதயநிதி ஸ்டாலின், மனோஜ் பரமஹம்சா, ஜஸ்டின் பிரபாகரன், இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் கலந்துகொண்டு பேசினர். 

இந்தப் படம் தொடர்பாக தயாரிப்பாளர்/நடிகர் உதயநிதி பேசியதாவது,

ராதே ஷியாம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள், ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்ட எஃப்ஐஆர் படத்தின் வெற்றி சந்திப்பிற்கே என்னால் வரமுடியவில்லை, என் படம் இன்று தான் ஆரம்பித்துள்ளது கட் அடித்துவிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன்.  அப்போது 3 1/4 மணி நேரம் ஓடியது, படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது. 

பிரபாஸ் உடைய ஃபேன் நான், பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும். பூஜா இங்கு அரபிக்குத்து குத்தினார்,  இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான சண்டைக்காட்சி இருக்கிறது. இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம். பார்த்து ரசியுங்கள் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

நடிகை பூஜா ஹெக்டே பேசியதாவது, 

நாங்கள் கடந்த 5 வருடங்களாக உழைத்த உழைப்பு உங்களுக்காக உருவாக்கிய காதல் கதை உங்களிடம் வந்துள்ளது. இந்த கடின காலத்தை தாண்டி, இந்த படத்தை எடுத்து வந்துள்ளோம், பிரமோத் மிக பிரமாண்டமாக படத்தை உருவாக்கியிருக்கிறார்,

ராதே பாத்திரம் எனக்கு மிக சிறப்பானதொரு பாத்திரம். சத்யராஜ் சாருடன் காட்சி இல்லாதது வருத்தம், பிரபாஸ் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தந்தார்,  மனோஜ் உடன் பீஸ்ட் படமும் செய்கிறேன். இந்தப்படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நன்றி. என்று பேசினார். 

இறுதியாக பேசிய பிரபாஸ்,

''சத்யராஜ் என் செல்ல கட்டப்பா, அவருடன் மிர்ச்சி படம் முதல் முறையாக பண்ணினேன் அது மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகு பாகுபலி, இப்பொது இந்த படத்தில் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். இது அருமையான காதல் கதை. ஆக்சனும் இருக்கிறது. காதல் கதைக்கு இசை முக்கியம்.

ஜஸ்டின் அற்புதமான இசையை தந்துள்ளார். இந்த படத்தின் நாயகன் மனோஜ் சார் தான் என்னை அத்தனை அழகாக காட்டியுள்ளார். எல்லோரும் காட்சிகளைப் பாராட்டுகிறார்கள் அவர்களுக்கு நன்றி. எல்லாம் மனோஜ் சாருக்கு தான். இந்தப்படத்தில் பூஜா மிக அழகாக இருக்கிறார் கெமிஸ்ட்ரி நன்றாக வந்துள்ளது.

பிரமோத் என்னை வைத்து காதல் கதை எடுத்திருக்கிறார் நிறைய தைரியம் இருக்கனும், இயக்குநர் பாகுபலிக்கு முன்பே இந்த கதையை சொன்னார். எப்படி என்னை காதல் கதையில் யோசித்தார் என தெரியவில்லை. 5 வருடம் நீண்ட பயணம் ராதே ஷ்யாம் மிக நல்ல படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com