
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் ரசிகர்களைக் கவர்ந்த படம் நல்ல வசூலைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித்தை திரையில் பார்த்த ரசிகர்கள், படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற பைக் ரேஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இதையும் படிக்க | டிரெட் மில்லில் அரபிக் குத்து பாடலுக்கு வித்தியாசமாக நடனமாடும் நடிகர்
இந்த நிலையில் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வில்லன் நடிகர் அஜித்தின் குடும்பத்தை தலைகீழாக கட்டி தொங்கவிட்டிருப்பார். இந்தக் காட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு ஜாக்கி சான் நடிப்பில் வெளிவந்த 'போலீஸ் ஸ்டோரி' படத்தை நியாபகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக இரண்டு காட்சிகளையும் ஒப்பிட்டு விடியோ வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக அஜித் ரசிகர்கள், எம்ஜிஆர் காலத்திலிருந்து பெரும்பாலான படங்களுக்கு இதுதான் கிளைமேக்ஸாக இருந்திருக்கிறது என கூறுகின்றனர்.
H Vinoth Enna ya ithalam ithula atlee ya copy mmbu vanga na #Valimai #beast @actorvijay @BoneyKapoor pic.twitter.com/z7zSVaqNAe
— ⱽʲ G O K U L (@GokulKu94690981) March 4, 2022