தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டிரெட் மில்லில் அரபிக் குத்து பாடலுக்கு வித்தியாசமாக நடனமாடும் நடிகர்

நடிகர் அஸ்வின் குமார் பீஸ்ட் பட அரபிக் குத்து பாடலுக்கு டிரெட் மில்லில் நடனமாடும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :5 மார்ச் 2022, 11:30 am

DIN

'பீஸ்ட்' பட அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான இந்தப் பாடல் தற்போது வரை யூடியூபில் 12 கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

இந்தப் பாடலை ரசிகர்களுக்கு இணையாக பிரபல நடிகர்கள், நடிகைகள் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்தப் பாடல் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

இந்த நிலையில் நடிகர் அஸ்வின் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரபிக் குத்து பாடலுக்கு நடைபயிற்சி செய்யும் டிரெட் மில்லில் நடனமாடும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். எனது ஆராட்டு படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வின்போது நடனமாடினேன்.

2 வருடங்களுக்கு பிறகு அரபிக் குத்து பாடலுக்கு டிரெட் மில்லில் நடனமாடியிருக்கிறேன். இதனை டிரெட் மில் குத்து அல்லது அரபிக் குத்து என சொல்லலாம் என குறிப்பிட்டுள்ளார். 

முன்னாதாக நடிகர் அஸ்வின் குமார் வாத்தி கம்மிங் மற்றும் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் பாடல்களுக்கும் டிரெட் மில்லில் நடனமாடி விடியோ பகிர்ந்திருந்தார்.

அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு அஸ்வின் குமார் நடனமாடும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கமல்ஹாசன், ''நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார்.

அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! என்று பாராட்டு தெரிவித்திருந்தது'' குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.