சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தன்னைப் பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது நடிகர் சிம்பு ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் 1080 நாட்கள் ஆகியும் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்பிக்காததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த அபராதத் தொகையை வருகிற மார்ச் 31க்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நடிகர் சிம்பு நடித்த 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தை குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

இந்த நிலையில் நடிகர் சிம்பு தங்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் படம் தோல்வி அடைந்ததற்கு சிம்புவே காரணம் எனவும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com