
'காசி', 'என் மன வானில்', 'சாது மிரண்டா' ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் காவ்யா மாதவன். மலையாளத்தில் அதிக படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மலையாள நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நடிகை காவ்யா மாதவனுக்கு சொந்தமாக லக்ஷியா என்ற பெயரில் துணிக்கடை உள்ளது. இந்தக் கடையானது எடப்பள்ளி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தக் கடையில் அதிகாலை 3 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இருப்பினும் துணிகள் மற்றும் தையல் எந்திரங்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல்துறையின் விசாரணைக்கு பிறகே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.