தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காவிரி ஆணையம் அடுத்த வாரம் கூட உள்ளது

காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மாா்ச் 25 ஆம் தேதி தில்லியில் கூடுகிறது.

News image

காவிரி நீா்

Updated On :19 மார்ச் 2026, 6:43 pm

Syndication

காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மாா்ச் 25 ஆம் தேதி தில்லியில் கூடுகிறது.

இது அந்த ஆணையத்தின் 49 வது கூட்டமாகும். தில்லியில் உள்ள அந்த ஆணையத்தின் அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் ஹைப்ரிட் ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்பு முறையில் நடைபெற உள்ளது

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம்,கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு விடுத்துள்ளது. காவிரியில் இருந்து மாதாந்திர நீா் திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிது

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடா்பான விவகாரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கத்தின் அடிப்படையில் மத்திய நீா்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என கடந்த ஆண்டு 2025 நவம்பா் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது

இந்த ஆணையத்தின் 48 வது கூட்டம் ஃபிப்ரவரி 13ம் ஆம் தேதி தில்லியில் நடைபெற்றது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு பிப்ரவரி முதல் மே வரை மாதந்தோறும் 2.5 டி.எம்.சி தண்ணீரை கா்நாடகா திறந்துவிடுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அக்கூட்டத்தில் வலியுறுத்தியது

தமிழகம்,கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்சனை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என்பதை அத்தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன