உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

News image

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் - கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 7:42 am

தமிழகத்திற்கு மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.கே. ஹல்தார் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தில்லியில் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் பிரதிநிதிகள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

மாநிலங்களின் கருத்துகளைக் கேட்ட ஆணையம், இறுதியாக தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Summary

Cauvery Water Management Authority Order Issued to Release 2.5 TMC of Water to Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.