
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா முதல்முதலாக இயக்கிய படம் - ஆரண்ய காண்டம். 2011-ல் வெளிவந்தது. ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, குரு சோமசுந்தரம், சம்பத் ராஜ் போன்றோர் நடித்தார்கள். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக 2019-ல் சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார்.
இந்நிலையில் ஆரண்ய காண்டம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ரமேஷ் துரானி, அக்ஷய் பூரி ஆகிய இருவரும் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்கள். செக்சன் 375 படத்தை இயக்கிய அஜய் பால், ஆரண்ய காண்டம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார்.
விஜய் சேதுபதி, கத்ரினா கயிஃப் நடிக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஹிந்தி படத்தையும் ரமேஷ் துரானி தயாரித்து வருகிறார்.
A Hindi adaptation of #ThiagarajanKumararaja’s #AaranyaKaandam is in pre-production. Producers @RameshTaurani & @PuriAkshai have acquired exclusive rights to this neo-noir action thriller.
— Tips Films & Music (@tipsofficial) March 14, 2022
The project is to be helmed by #AjayBahl known for his directorial success #Section375. pic.twitter.com/QVGwXU7JMd