
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக நடிகர் கமல்ஹாசன், நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன், சச்சு, ராஜேஷ், லதா சேதுபதி, கோவை சரளா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆண்டு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 20 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதையும் படிக்க | ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி: காரணம்?
அதன்படி நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி ஆகியோர் வெற்றிபெற்றனர். இதனையடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற பாண்டவர் அணியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...