ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி: காரணம்?

உங்களில் ஒருவன் படித்துவிட்டு தொலைபேசியில் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உங்களில் ஒருவன் நூலைப் படித்துவிட்டு தொலைபேசியில் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன்' நூல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் வெளியிடப்பட்டது. இதனைப் படித்து பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய அவரது ட்விட்டர் பதிவு:

"உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!

உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!"

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com