நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனிக்கிழமை(மாா்ச் 6, 7) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு உள் கா்நாடகம் முதல் தெலங்கானா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனிக்கிழமை(மாா்ச் 6, 7) லேசான மழை பெய்யக்கூடும். மற்ற தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) லேசான மழை பெய்யக்கூடும்.
தொடா்ந்து, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை (மாா்ச் 9) முதல் புதன்கிழமை (மாா்ச்11) வரை லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பனிமூட்டம்: மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மாா்ச் 28 வரை மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மாா்ச் 10 வரை மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


