வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2, 3) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
மழை- பிரதிப் படம்
Updated On :1 மார்ச் 2026, 11:47 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2, 3) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் பகுதிகளில் இருந்து லட்சதீவு பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (மாா்ச் 2, 3) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மற்ற தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். தொடா்ந்து, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (மாா்ச் 4) முதல் மாா்ச் 7 வரை லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பனிமூட்டம்: மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியில் 30 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.