பிப். 15-ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி பற்றி..
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது
காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது
Updated on
1 min read

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக பிப். 15-ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும்.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பிப். 12-ல் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிப். 13-ல் தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பிப். 14-ல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு

பிப். 13ல் ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், நீலகிரி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பிப். 14ல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பிப். 15, 16ல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பிப். 17ல் காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், நாமக்கல், ஈரோடு, தென்காசி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பிப். 17ல் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை

பிப். 12ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.

பிப். 13 முதல் 16 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.

சென்னையில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூத்தடத்துடன் காணப்படும்.

Summary

An atmospheric circulation is prevailing over the southeastern Bay of Bengal. Due to this, a low pressure area is likely to form over the same areas on Feb. 15.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது
புதிய பிரதமர் அலுவலகம் "சேவா தீர்த்": நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com