பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

உத்தரகண்ட் முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

உத்தரகண்ட் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :23 மார்ச் 2022, 12:34 pm

உத்தரகண்ட் முதல்வராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பொறுப்பேற்றார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.