நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழக அளவில் 1000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. தமிழகத்தில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொடக்கம் முதலே நல்ல வரவேற்பைப் பெற்ற வலிமை திரைப்படமானது உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.70 கோடி அளவுக்கு வசூல் செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுவரை உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதனை அவர் தனது சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


