மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' பட முக்கிய காட்சி யூடியூபில் வெளியானது

ஜி.வி.பிரகாஷின் செல்ஃபி படத்திலிருந்து சில நிமிட காட்சி வெளியாகியுள்ளது. 

Published On :

இயக்குநர் வெற்றிமாறனின் உறவினரும், உதவியாளருமான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் 'செல்ஃபி'. இயக்குநர் கௌதம் மேனன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக வர்ஷா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை டிஜி ஃபிலிம் கம்பெனி மற்றும் வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. 

இந்தப் படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சி யூடியூபில் வெளியாகியுள்ளது. 

இந்தப் படம் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளை கதைக் களமாக கொண்டுள்ளது. இந்தப் படத்தை சமீபத்தில் பாமக இளைஞரணி செயலர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.