
ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள 'செல்ஃபி' திரைப்படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்தப் படத்தை டிஜி ஃபிலிம் கம்பெனி மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இயக்குநர் வெற்றிமாறனின் உறவினரும் உதவி இயக்குநருமான மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ''செல்ஃபி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தேன்.
இதையும் படிக்க | பாலா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் நடிகை: சுவாரசியத் தகவல்
நீட் மற்றும் அதிக கல்வி கட்டணம் காரணமாக நிகழும் தற்கொலைகள் குறித்து தைரியமாக பேசியிருக்கிறது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் புதுமுக நடிகர் குணநிதி சிறப்பாக செய்துள்ளார்கள்.
நான் பார்த்த சிறந்த ஜி.வி.பிரகாஷின் படங்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படத்தை அளித்த இயக்குநர் மதிமாறனுக்கு வாழ்த்துகள்.'' என்று தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Watched the preview of the movie ‘Selfie’ yesterday. A daring power packed movie exposing scams, suicides, murders related to NEET and capitation fees. GV Prakash, Gowtham Vasudev Menon and newcomer Gunanidhi have rocked!(1/2)#Selfie @gvprakash @theVcreations @menongautham pic.twitter.com/CabHJ33uL7
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 27, 2022