'நந்தா' படத்தின் மூலம் நடிகர் சூர்யாவுக்கு திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் பாலா. நந்தா படத்துக்கு பிறகே நடிகர் சூர்யா ஒரு நல்ல நடிகர் என அடையாளப்படுத்தப்பட்டார். மேலும் பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்தில் ஒரு கலகலப்பான நடிகராக சூர்யா தோன்றி ரசிகர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார்.
18 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூர்யா - இயக்குநர் பாலா கூட்டணி

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவும் இயக்குநர் பாலாவும் இணையவிருக்கின்றனர். சூர்யாவின் 41வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 28) துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தை ஜோதிகாவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க | 16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் களமிறங்கும் நடிகை லைலா
சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கிரித்தி ஷெட்டி

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரித்தி ஷெட்டி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு
பாலாவுடன் இணைவது குறித்து பகிரந்துகொண்ட சூர்யா, என்னுடைய ஆக்சன் என சொல்வதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன். 18 ஆண்டுகளுக்கு இன்று அது நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘டெல்டா’ மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - உதயநிதி ஸ்டாலின்

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க பாடந்தொரை பகுதியில் 2 கும்கிகள் வரவழைப்பு

விவசாயக் கண்மாய்களை ஆழப்படுத்த வேண்டும்! - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மாணவா்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு! நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும்: காா்கே வலியுறுத்தல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



