நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

16 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் களமிறங்கும் நடிகை லைலா

நடிகை லைலா மீண்டும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். 

News image
Updated On :28 மார்ச் 2022, 2:02 pm IST

நடிகர் விஜயகாந்த்தின் 'கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை லைலா. சூர்யாவுடன் 'நந்தா', 'உன்னை நினைத்து', 'பிதாமகன்', 'மௌனம் பேசியதே', விக்ரமுடன் இணைந்து 'தில்', அஜித்துடன் 'பரமசிவன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் 'உள்ளம் கேட்குமே', 'கண்ட நாள் முதல்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

கடைசி படம்

கடைசியாக நடிகர் அஜித்தின் 'திருப்பதி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகை லைலா களமிறங்கவிருக்கிறார். 

சர்தார் படத்தில் லைலா 

Story image

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் 'சர்தார்' படத்தில் லைலா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் இணைந்து அதிக படங்களில் நடித்த லைலா, தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

திருமண வாழ்க்கை 

Story image

ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமண செய்துகொண்ட லைலாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முன்னதாக ஜி தமிழ் ஒளிபரப்பான 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' என்ற நிகழ்ச்சியில் லைலா நடுவராக கலந்துகொண்டிருந்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.