அஜித் பிறந்த நாள்: ஓபிஎஸ், அண்ணாமலை வாழ்த்து

​நடிகர் அஜித் குமார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அஜித் பிறந்த நாள்: ஓபிஎஸ், அண்ணாமலை வாழ்த்து


நடிகர் அஜித் குமார் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜித் குமார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்களும் கொண்டாடி வருகிறார்கள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் வாழ்த்து:

"உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!"

அண்ணாமலை வாழ்த்து:

"பன்முகத் தன்மையும், தனக்கென்று தனி பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com