
விஜய் நடிக்கும் 66-வது படத்தில் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா, நடிகை சங்கீதா உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத்குமார், யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஏற்கெனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா, நடிகை சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது.
மேலும், நடிகர் ஷாம், யோகி பாபு ஆகியோரும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.