
ஹிந்திப் படங்களில் நடித்து தன் நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை என தெலுங்கின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
நடிகர் மகேஷ் பாபு தயாரிப்பில் உருவான ‘மேஜர்’ திரைப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ‘ஏன் ஹிந்திப் படங்களில் நடிப்பதில்லை’? என மகேஷ் பாபுவிடம் கேள்வி கேட்டகப்பட்டது.
இதற்கு மகேஷ் பாபு ‘ ஹிந்தியில் என்னை நடிக்கச் சொல்லி நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கில் இருக்கும் நட்சத்திர அந்தஸ்து எனக்கு போதும். நான் தெலுங்கு படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். இந்தியா முழுவதும் உள்ளவர்கள அந்தப் படங்களைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ எனத் தெரிவித்தார்.
மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘சர்க்காரு வாரிபட்டா’ திரைப்படம் நாளை மே-12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...