கமலின் விக்ரம் பட டிரெய்லரில் இடம்பெற்றுள்ள இந்தப் பெண் யார்?

இந்த டிரெய்லரில் ஒரு நொடி மட்டும் இடம்பெற்றுள்ள நடிகையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கமலின் விக்ரம் பட டிரெய்லரில் இடம்பெற்றுள்ள இந்தப் பெண் யார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன்  நடித்துள்ள படம் - விக்ரம். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் போன்றோர் நடித்துள்ளார்கள். ஜுன் 3 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நேற்றிரவு படத்தின் டிரெய்லர் யூடியூப் தளத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்த டிரெய்லரில் ஒரு நொடி மட்டும் இடம்பெற்றுள்ள நடிகையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன். சவரக்கத்தி படத்தில் அறிமுகமானவர், சில படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம் படத்தினால் ரசிகர்களின் அதிகக் கவனத்தைப் பெற்றுள்ளார். தனக்கென ஒரு யூடியூப் சேனலும் வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com