
பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் இரவின் நிழல் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படுவதாக அவரே கூறியுள்ளார்.
பார்திபன் ராதகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இரவின் நிழல்’. இப்படம் ஒரே ஷாட்டில் நான் லீனியராக உலகிலேயே முதன் முறையாக படமாக்கப்பட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ளது.
இதில் பார்த்திபன், வரலட்சுமி சர்த்குமார், ரோபோ சங்கர்,பிரிகடா போன்றோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - ஆர்தர் வில்சன், இசை - ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்த படம் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுவதாக பார்த்திபன் அவர்கள் ட்விட்டரில் அவருக்கே உரிய பாணியில் கூறியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...