கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஐபிஎல் இறுதிச்சுற்றின்போது ஆமிர் கான் பட டிரெய்லர் வெளியீடு

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறும் சமயத்தில் அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.

News image
Updated On :21 மே 2022, 8:06 am

DIN

ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறும் சமயத்தில் அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு ஆமிர் கான் நடிக்கும் படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் இது. 

இந்தப் படத்தில் ஆமிர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. ஆகஸ்ட் 11 அன்று படம் வெளியாகிறது.

இந்நிலையில் மே 29 அன்று ஆமதாபாத்தில் ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில் லால் சிங் சத்தா படத்தின் டிரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளார் ஆமிர் கான். மே 29 அன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிச்சுற்றின் 2-வது இடைவேளையின்போது லால் சிங் சத்தா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் பல கோடி ரசிகர்கள் படத்தின் டிரெய்லரைக் காணும் வாய்ப்பு உருவாகவுள்ளது. ஒரு முக்கியமான விளையாட்டுப் போட்டி நடைபெறும் சமயத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிடுவது நல்ல விளம்பர உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.