
பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள சுயாதீன பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் நாளை (மே 23) மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார்.
ரனினா ரெட்டி இந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை திம்மப்பா கொல்லார் இயக்கியுள்ளார்.
கே.கே.ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாடல் உருவாகியுள்ளது. தமிழில் 'மன்னிப்பு' என பெயரிப்பட்டுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
இவர் இதற்கு முன்பு இயக்குநர் கவுதம் வாசுதேவ் உடன் இணைந்து சுயாதீனப் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.