
இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் விருமன் என்கிற படத்தில் அறிமுகமாகிறார் அதிதி. இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் - முத்தையா. இசை - யுவன் சங்கர் ராஜா.
ஆகஸ்ட் 31-ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று விருமன் படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூவு கண்ணால பாடல், இன்று வெளியிடப்பட்டுள்ளது. சித்ஸ்ரீராம் இப்பாடலைப் பாடியுள்ளார்.