

2011-ல் அஜித் நடித்த மங்காத்தா படத்தை தயாநிதி அழகிரி தயாரித்தார். பல படங்களை விநியோகம் செய்துள்ளார்.
இந்நிலையில் அஜித் மற்றும் அவருடைய குடும்பத்தினரைச் சமீபத்தில் சந்தித்துள்ளார் தயாநிதி. இதுகுறித்து தயாநிதியும் அவருடைய மனைவி அனுஷாவும் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
ட்விட்டரில் தயாநிதி கூறியதாவது: சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் என்று. அவர் அருகில் இருக்கும்போது கிடைக்கும் உற்சாகத்தை விளக்க முடியாது. அவரைப் பிரமிப்புடன் பார்க்கிறேன் என்றார்.
அனுஷா கூறியதாவது: திரைத்துறையில் இந்த இரு நடிகர்களின் ஆற்றலுக்கு நிகராக வேறு யாரும் அவ்வளவு பொருத்தமாக இருக்கமுடியாது. ஒரு குடும்பமாக அவர்கள் அவ்வளவு அழகாக உள்ளார்கள். நிச்சயமாக அல்டிமேட் மாலைதான் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.