விஜய்யின் வாரிசு பாடல் வெளியீட்டு விழா எங்கு, எப்போது?: புதிய தகவல்

விஜய்யின் வாரிசு பாடல் வெளியீட்டு விழா எங்கு, எப்போது?: புதிய தகவல்

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபையில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபையில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படும் எனச் சமீபத்தில் விஜய் பேட்டியளித்திருந்தார். இது விஜய் நடிக்கும் 66-வது படம். வாரிசு, 2023 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலின் சிறுபகுதி நேற்று வெளியானது. இந்தப் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா டிசம்பர் 24 அன்று துபையில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com