
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது. இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
சமீபத்தில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: ‘மாவீரன்’ படப்பிடிப்பு: புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ஷங்கர்!
இந்நிலையில், ‘உளவாளி’ படத்தில் இடம்பெற்ற ‘மொச்ச கொட்டை பல்லழகி’ பாடலின் மெட்டுகளைக் கொண்டு ரஞ்சிதமே பாடல் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
தமன் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக இருந்தாலும் அவரின் சில பாடல்கள் இதேபோல் வேறு பாடல்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.