
தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாப்பாத்திரமான நாய் சேகர் பட கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது.
‘நாய் சேகர்’ என்ற பெயரில் முன்னரே சதிஷ் படம் அறிவிக்கப்பட்டதால் இந்தப் படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று பெயர் மாற்றப்பட்டது. தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ் இந்தப் படத்தை இயக்கிவருகிறார்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தற்போது படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இந்தத் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடி உரிமையைப் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...