'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்த ஷிவானி, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். தற்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் படத்திலும் நடித்துள்ளார்.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளது. இந்த படம் 2023 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது.
'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஜய் மற்றும் மானசியின் குரலில் இந்த பாடல் வெளியானது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
தற்போது இந்த பாடலுக்கு ஷிவானியின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.