
நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியீடு
தற்போது, படப்பிடிப்பு பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், நேற்று இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமாரின் தோற்ற புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில், இன்று ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ள கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.
Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer
— Sun Pictures (@sunpictures) November 18, 2022
@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs