ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

சிம்புவின் ‘பத்து தல’ வெளியீடு எப்போது?

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைபடத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Published On :

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைபடத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். 

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

இந்தப் படத்தின் முழுப் பணிகளும் விரைவில் நிறைவடைந்துவிடும் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சில காட்சிகளை மீண்டும் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இப்படம் மீண்டும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.