
சசிகுமார் / உதயநிதி ஸ்டாலின்
நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தினை கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களின் இயக்குநர் இரா.சரவணன் இயக்குகிறார்.
சமீபத்தில் சசிகுமாரின் நான் மிருகமாய் மாற, காரி வெளியானது. தற்போது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை முதல் பார்வை போஸ்டருடன் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
இது குறித்து சசிகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி... நெஞ்சுக்கு நெருக்கமான படத்தின் அறிவிப்பு நாளை... மிக்க நன்றி உதயநிதி. வெல்வோம் இரா. சரவணன்” என தெரிவித்துள்ளார்.