’இதை நீக்கவில்லையென்றால் வழக்கு தொடுப்போம்..’ ஆதிபுருஷ் படத்திற்கு சிக்கல்

ஆதிபுருஷ் டீசரில் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக மத்தியப் பிரதேச எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
’இதை நீக்கவில்லையென்றால் வழக்கு தொடுப்போம்..’ ஆதிபுருஷ் படத்திற்கு சிக்கல்

ஆதிபுருஷ் டீசரில் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக மத்தியப் பிரதேச எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

’பாகுபலி 2' படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

’தன்ஹாஜி’ படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ்.

2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்பட்டு 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆதிபுருஷ் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இலங்கைக்குச் சென்று சீதாவை மீட்கும் ராமரின் கதையான இப்படம் முழுக்க கிராபிக்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் விஎஃப்எக்ஸ்(vfx) தரம் குழந்தைகளுக்கான கார்டூன் தரத்தில் இருப்பதால் இணையத்தில் இந்த டீசர் கடுமையான விமர்சனங்களையும் கிண்டலையும் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ‘டீசரில் உடன்பாடில்லாத காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், ஹனுமான் தோல் ஆடைகளை அணிந்து காட்சியளிக்கிறார். இதுபோன்ற காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்துகின்றன. இவற்றை நீக்குமாறு தயாரிப்பாளர் ஓம் ரவுத்துக்கு கடிதம் எழுதுகிறேன். அவர் நீக்கவில்லை என்றால், சட்ட நடவடிக்கையை பற்றி யோசிப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com