பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் இணைந்து நடித்தால் எளிதில் ரூ. 3,000 முதல் 4,000 கோடி வசூலை எட்டும் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லுசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’காட்ஃபாதர்’ திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் சல்மான் கானும் நடித்துள்ளார். இந்த படத்தில் நயந்தாராவும் நடித்துள்ளார். இயக்கம் - மோகன்ராஜா. இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா.
இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் கான் பேசுகையில்,
“பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால், அதிக ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். நாம் ரூ. 300 - 400 கோடி வசூலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால் எளிதாக ரூ. 3,000 - 4,000 கோடியை எட்ட முடியும்.
இதையும் படிக்க | முறுக்கு மீசையுடன் கமல்! வைரலாகும் புகைப்படம்
பலர் ஹாலிவுட் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், நான் தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

