
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உலகளவிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.
இதையும் படிக்க: நடிகர் போண்டா மணியிடம் ரூ.1 லட்சம் திருட்டு: ஒருவர் கைது
இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடி வசூலைக் குவித்ததாகவும் தமிழ்த் திரையுலகில் மிக வேகமாக (ஆறு நாள்களில்) ரூ. 100 கோடி வசூலைப் பெற்ற படம் என மெட்ராஸ் டாக்கீஸ் விளம்பரத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று ’பொன்னியின் செல்வன்’ உலகளவில் ரூ.300 கோடியை வசூல் செய்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Success beyond boundaries!
— Lyca Productions (@LycaProductions) October 7, 2022
Thank you for this tremendous response #PS1 #PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/XMdztUnkGc