எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

மகன்களின் வெற்றி: பெருமைப்படும் ஜெயம் ரவி - மோகன் ராஜாவின் பெற்றோர் - பிரபலங்கள் வாழ்த்து

காட்ஃபாதர் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றியினால் பெருமைப்படும் பெற்றோர் என மோகன் ராஜா பகிர்ந்துள்ள படம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :8 அக்டோபர் 2022, 7:36 am

காட்ஃபாதர் மற்றும் பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றியினால் பெருமைப்படும் பெற்றோர் என மோகன் ராஜா பகிர்ந்துள்ள படம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய காட்ஃபாதர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. அடுத்தடுத்த தோல்விகளினால் துவண்டிருந்த சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு காட்ஃபாதர் படத்தின் வெற்றி உற்சாகத்தை அளித்துள்ளது. 

Story image
Story image

இதேப் போல மோகன் ராஜாவின் தம்பி ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக நடித்த பொன்னியின் செல்வன் படமும் வசூல் சாதனை படைத்துவருகிறது.

இந்த நிலையில் இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தை எடிட்டர் மோகன் மற்றும் தாய் இருவரும் பொன்னியின் செல்வன் மற்றும் காட்ஃபாதர் படங்களின் விளம்பர பதாகைகளின் முன் நிற்கும் படத்தைப் பகிர்ந்து, பெருமைமிகு பெற்றோர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனை ஜெயம் ரவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இருவருக்கும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகை ஜெனிலியா தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் இருவரையும் நினைத்து பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெனிலியா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் மற்றும் காட்ஃபாதர் ஆகிய இரு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்துவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.