நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய விருது பெற்ற நஞ்சம்மாவின் முதல் தமிழ்ப் பாடல் இதுதான்!

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா தமிழிலும்  அறிமுகமாகவுள்ளார்.

News image

நஞ்சம்மா

Updated On :12 அக்டோபர் 2022, 10:48 am

DIN

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா தமிழிலும்  அறிமுகமாகவுள்ளார்.

இயக்குநர் சச்சி இயக்கத்தில்  பிரிதிவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியான மலையாளப் படமான அய்யப்பனும் கோஷியும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதுடன் 4 தேசிய விருதுகளையும் பெற்று அசத்தியது.

குறிப்பாக, அப்படத்தில் இடம்பெற்ற ‘களக்காத்த சந்தன மேரம்’ பாடலைப் பாடிய நஞ்சம்மாவின் குரல் தென்னிந்திய சினிமா ரசிகர்களை அதிகளவில் ஈர்த்தது. பழங்குடியான நஞ்சம்மா மேடைக் கச்சேரிகளில் பாடல்களைப் பாடிவந்துள்ளார். ஆனால், அய்யப்பனும் கோஷியும் படம் அவரை சினிமா உலகில் பெரிதாக அறிமுகப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் செக்கன், ஸ்டேசன் 5 உள்ளிட்ட படங்களில் சில பாடல்களைப் பாடினார்.

இந்நிலையில், மலையாள இயக்குநர் சமர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சீன் நம்பர் 62’ என்கிற தமிழ்ப் படத்தில் பாடகர் வேல்முருகனுடன் இணைந்து ‘என் சேவல்’ என்கிற தமிழ் பாடலை நஞ்சம்மா பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருவதால் விரைவில் நஞ்சம்மாவின் குரலில் ஒரு தமிழ்ப் பாடலைக் கேட்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.