சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வெங்கட் பிரபு படத்தில் களமிறங்கும் நடிகர்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :14 அக்டோபர் 2022, 8:24 am

வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

மாநாடு, மன்மத லீலை படங்களுக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். 

Story image

இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீவா வில்லனாக நடிககிறாராம்.

Story image
Story image
Story image

ஏற்கனவே ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்றுவருகிறது.

Story image

இந்த நிலையில் பிரியாமணி, நடிகர் சம்பத், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், பிரேமி வசந்த் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.