
பிரபல பாலிவுட் இயக்குநர் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இருப்பவர் இயக்குநர் சஜித்கான். மீ டூ புகாரின்போது 10 மேற்பட்டப் பெண்கள் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தது ஹிந்தி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இவர் மீது சில புகார்கள் வந்துகொண்டிருக்கிறது.
தற்போது ஹிந்தி பிக்பாஸ் சீசன் 16-இல் கலந்துகொண்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இவரை அத்தொடரிலிருந்து வெளியேற்ற வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், பேஜ்புரி நடிகை ராணி சாட்டர்ஜி சஜித்கான் படப்பிடிப்பின் போது தன்னை பாலியல் ரீதியாக தொடர்பிலிருக்கும்படி வலியுறுத்தினார் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.