
நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் தொடர்பாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள் ? உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என தனது கவலையைத் தெரிவித்திருந்தார்.
அவருக்கு பிதலளித்த சிவகார்த்திகேயன், ''என்னிடம் எல்லோரும் ஏன் இப்படி சோர்வாக இருக்கீங்க, உடம்பு சரியில்லையா என கேட்கிறார்கள். வேற ஒன்னும் இல்ல. மாவீரன் இரவு படப்பிடிப்பு நடந்தது.
அது முடிந்ததும் 2 மணி நேரம் மட்டும் தூங்கிவிட்டு, பகலில் பிரின்ஸ் புரமோஷனுக்கு வந்துவிட்டேன். தூக்கம் ரொம்ப கம்மியாகிடுச்சு. ரிலீஸ் முடிஞ்சதும் உங்களோட கொண்டாடிட்டு ஜாலியா தூங்க வேண்டியதுதான்'' என்றார்.
பிரின்ஸ் திரைப்படம் நாளை (அக்டோபர் 21) திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை ஜதி ரத்னாலு என்கிற தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற உக்ரைன் நடிகை நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.