தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து சொல்லியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
டாக்டர், டான் என தொடர் வெற்றிகளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படம், ஜதி ரத்னாலு என்ற வெற்றிப் படத்துக்கு பிறகு தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கிய படம் என்பதால் பிரின்ஸ் மீதான மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் இன்று தனது மகள் ஆராதனாவின் பிறந்த நாள் என்பதால் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, என்னுடைய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். இதனயைடுத்து ஆராதனாவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju
டெஸ்ட்டில் முச்சதங்கள் குறைந்ததற்கு டி20 கிரிக்கெட் காரணமா? ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

கடவுளின் குழந்தை நான்... நள்ளிரவில் பதிவிட்ட விஷால்!

கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை!
விடியோக்கள்

Vishwanath and Sons Public Review! | படம் எப்படி இருக்கு? | Suriya | Mamitha Baiju



