92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரஜினியுடன் மோதும் இயக்குநர் ஷங்கர் !

ரஜினியின் ஜெயிலர் படமும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :23 அக்டோபர் 2022, 7:47 am

DIN

ரஜினியின் ஜெயிலர் படமும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ரஜினிகாந்த்தின் நடித்து வரும் ஜெயிலர் படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் படமும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாம். இதனால் பாக்ஸ் ஆபிசில் எந்த படம் அதிகம் வசூலிக்கும் என்ற போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த்தும் இயக்குநர் ஷங்கரும் இணைந்து சிவாஜி, எந்திரன், 2.0 என மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கிவருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துவருகிறார். இசையமைப்பாளர் தமனை பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராகவும், தான் தயாரித்த ஈரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தியவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.