5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

பாட்டு, நடனம் என களைகட்டிய நடிகர் சிவகுமார் குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்டம் (விடியோ)

சூர்யா, ஜோதிகா, கார்த்தி உட்பட நடிகர் சிவகுமார் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய விடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:09 pm IST

சூர்யா, ஜோதிகா, கார்த்தி உட்பட நடிகர் சிவகுமார் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய விடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நடிகர் சிவகுமார் இல்லத்தில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நேற்று மாலை (அக்டோபர் 23) தீபாவளி கொண்டாடியுள்ளனர். அப்போது நடிகர் சூர்யா, கார்த்தி, அவர்களது தங்கை பிருந்தா, ஜோதிகா, கார்த்தியின் மனைவி உள்ளிட்டோருடன் நடிகை ராதிகா சரத்குமாரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா பகிர்ந்துள்ளார். 

அதில் நடிகர் கார்த்தியுடன் நடமாடும் விடியோ, சூர்யா, ஜோதிகா மற்றும் சிவகுமாருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி,வையும் இடம்பெற்றுள்ளது. அந்த விடியோவில் தென்பாண்டி தமிழே  என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. நடிகர் சிவகுமாரும் ராதிகாவும் அண்ணன் தங்கையாக நடித்த பாசப் பறவைகள் என்ற படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.