

யோகி பாபுவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டிக்கு யாரும் இல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார் யோகி பாபு. மேலும் சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துவருகிறார்.
அந்த வகையில் அவர் நடித்த மண்டேலா திரைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்துள்ள யோகி பாபு தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார்.
இதையும் படிக்க | ரசிகர்களுக்கு விடியோ மூலம் தீபாவளி வாழ்த்து சொன்ன சூர்யா - ஜோதிகா
யோகி பாபுவுக்கும் மஞ்சு பார்கவிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே ஆண் குழந்தையுள்ள நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.